பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
5

என்று ஒர் அருமையான குறளையும் வள்ளுவர் வழிகாட்டியாகத் தந்து நம்மைக் காப்பாற்றி வருகிறார்.

வள்ளுவர் செய்திருக்குறளை மறுவற நன்குணர்ந்தவர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி?

பேராசிரியர் சுந்தரனாரின் இந்தக் கருத்துரையை எடுத்துக் காட்டுவது பொருத்தமாகும்.

ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் நூல் மனுநீதி மட்டும் அல்ல; இன்னும் பல உள்ளன என்று கூறுவது போல மனுவாதி என்ற சொல்லை இங்கே சுந்தரனார் பயன்படுத்துகிறார்.

கீதை என்ற நூலை நான் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளுகிறேன்.

இந்நூலைச் சமயத்துறையில் உள்ள பல பெரிய மனிதர்கள், போற்றுகிறார்கள்; பாராட்டுகிறார்கள். இவ்வுலக வாழ்விற்கும், மறு உலக வாழ்விற்கும் சிறந்த வழிகாட்டி என்று விளம்பரப் படுத்துகிறார்கள், கீதையை வழங்கியவர் மகா விஷ்ணுவாகிய கண்ண பெருமானே என்று போற்றப்படுகிறது. இப்படிப்பட்ட பல பெரிய புள்ளிகளால் போற்றப்படுகிற கீதையை நான் விரும்பிக் கற்கத் தொடங்கிய போது எனக்குச் சில கருத்துகள் தோன்றின.

கீதை வாழ்வுக்கு உறுதி பயக்கும் நூல் தானா? என்ற கேள்வி எழுந்தது.

அதற்கு விடை காண்பதற்காக நூல் முழுவதையும் அமைதியாகப் படிக்க முற்பட்டேன்.