பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 கீதை காட்டும் பாதை கீதையில் கண்ணன் கூறும் இந்த ஒரு கருத்தே மக்கள் முன்னேற்றத்திற்கு எதிரான சதிக் கருத்தா கும். உயர்ந்த வருணத்தாரைக் காப்பாற்றித் தாழ்ந்த வருணத்தாரை என்றென்றும் துன்பத்தில் உழலச் செய்வதற்கே இது போன்ற தீய கருத்துக்களைக் கீதை கூறுகிறது. மக்களைக் கூறுபடுத்தி ஊறுபடுத்தும் மன்னிக்க முடியாத இந்தக் கருத்தைப் பாராட்டுபவர்கள் மனித இனத்தின் பகைவர்களே யாவர். அவர்களுக் கெல் லாம் தலைமையான சூத்திரதாரியாக இருக்கிறான் கிருஷ்ணன். உழைப்பவன் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும், உயர்வடைவதற்கு ஆசைப்படக் கூடாதென்றும், உயர்ந்த நிலையில் இருப்பவன் மீது ஆத்திரப்படக் கூடாதென்றும், அவனைப் போல் தானும் உயர் நிலைக்கு வர ஆசைப்படக் கூட." தென்றும், இந்த ஆசையும் ஆத்திரமும் அழிவு தரும் என்றும், அது பாவம் என்றும் இந்தக் கர்ம யோகத் தில் கூறி முடிக்கிறான் கண்ணன். வேறு சாதிக்காரன் தொழிலைக் கற்றுக் கொண்டு நன்றாகச் செய்தாலும் அது கூடாதாம். தன் சாதித் தொழிலைச் செய்து செத்துப் போனா லும் அது நல்லதாம். இப்படி சமுதாய முன்னேற்றத் துக்குத் தடையான ஒரு கருத்தை மேலான தென்று சொல்லுபவர்கள்,