பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு பயங்கர ஏற்பாடு 67 அக்கரை யில்லாமல் கேட்டுக் கொண்டிருக்கும் ஒருவனுக்குத் தான் ஏதேதோ சொல்லிக் கொண் டிருப்பதை அந்தக் கண்ணன் உணர்ந்ததாகத் தெரியவில்லை. மேன்மேலும் தன்னைப் பற்றிச் சொல்லத் தொடங்குகிறான். ஞான யோகம் என்ற நான் காவது அத்தியாயத்தில் தன் பெருமைகளைப் பேசுகிறான். அர்ச்சுனா, எனக்குப் பல பிறப்புக்கள் ஏற்பட்டிருக் கின்றன. உனக்கும் அப்படியே. நீ அவற்றை அறிய மாட்டாய் நான் அறிவேன். -கீதை 4 : 5 உயிர்களுக்கெல்லாம் நான் ஈசன். எனக்குப் பிறப்பும் இல்லை அழிவும் இல்லை. ஆனால், ஆத்ம மாயையால் நான் பிறப்பெய்துகிறேன். -கீதை 4 : 8 எப்போதெல்லாம் தர்மம் அழிந்து போய் அதர்மம் தல்ை துாக்குகிறதோ, அப்போதெல்லாம் என்னை நான் பிறப் பித்துக் கொள்கிறேன். - கீதை 4 : 7 நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலை நிறுத்தவும் நான் புகந்தோறும் பிறக்கிறேன். -கீதை 4 : 8 குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களைச் சமைத்தேன். செய்கை யற்றவனும் அழிவற் றவனுமாகிய யானே அவற்றைச் செய்தேன். இதை உணர்ந்து கொள்வாயாக. - கீதை 4 - 13