பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 கீதை காட்டும் பாதை செய்கையில் செயலின்மையும், செயலின்மையில் செய் கையையும் எவன் காணுகிறானோ, அவனே அறிவுடை யோன். அவன் எத்தொழில் செய்கையிலும் யோகத்தில் இருப்பான். - -கீதை 4 : 18 வேள்வியில் மிஞ்சிய அமுதை உண்போர் என்றும் உள தாகிய பிரமத்தை எய்துகிறார்கள். வேள்வி செய்யாதோ ருக்கு இவ்வுலகம் இல்லை. அவர்களுக்குப் பரமலோகம் ஏது? - கீதை 4 : 1.3 பிறப்புகள் பல உண்டு என்பதே கற்பனை! அந்த மூடக் கற்பனையை அடிப்படையாகக் கொண்டு, இங்கே அர்ச்சுனனையும் தன்னையும் வேறுபடுத்திக் காட்டுகிறான். அர்ச்சுனன் சாதாரண ஆத்மா என்பதால், தன் பிறப்புக்களை அறியமாட்டானாம்; கண்ணன் பரமாத்மாவாக இருப்பதால் தன் பிறப்புக்களைப் பற்றி அறிவானாம். அதனால், தன் முன் பிறப்பில் விவஸ்வானுக்கு ஞான யோகத்தைச் சொன்னதாகக் கூறுகிறான். அடுத்து தன்னுடைய கடவுள் தன்மையை எடுத்துக் காட்டுகிறான். எல்லாருக்கும் கடவுளாகத் தான் இருப்பதால் தனக்குப் பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை என்கிறான். அப்படியானால் இப்போது பிறந்திருக்கிறாயே என்று கேட்டால், ஆத்ம மாயையால் அவன் தன்னைப் பிறப்பித்துக் கொண்டதாகக் கூறுகிறான். எல்லாம் வல்லவனாகிய கடவுள் தன் ஆற்ற லால் எதனையும் சாதிக்க முடிந்தவனாக இருக்க