பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 ைேத காட்டும் பாதை உலகில் அவன் பிறப்பெடுத்ததாகக் கூறப்படும் காலங்களிலும் அதர்மம் ஒழிந்ததாகக் காணப்பட வில்லை. மேலும், அவனே பல அதர்மங்களைச் செய்ததாகவும், அவற்றிற்குக் காரணமாக இருந்த தாகவும் புராணங்கள் இதிகாசங்கள் கூறுகின்றன. இறை நிலையில் தன்னை வைத்துப் பேசுகிற வன் என்றாவது தான் அருள் நிலையில் இருந்து பகைவர்களுக்கு நல்வழி காட்டியதாக ஒரு கதையும் இல்லை. அவர்களைப் பழிவாங்கிச் சாகடித்து மோட்சம் அருளியதாகத் தான் அத்தனை கதை களும் பேசுகின்றன. அருளற்ற ஒருவன், தன்னை மனிதன் என்று சொல்லிக் கொள்வதற்கே அருகதையற்றவன் என்னும்போது தன்னைத் தானே இறைவன் என்றும் பரம்பொருள் என்றும் பேசிக் கொள்வது பிறரை ஏமாற்றுவதற்கேயாகும். யுகந்தோறும் நல்லோரைக் காக்கவும் தீயோரை அழிக்கவும் அறத்தை நிலை நிறுத்தவும் தான் பிறப் பதாகக் கண்ணன் கூறுகிறான். ஆனால் அவனுடைய திருவிளையாடல்களாகப் புராணங்கள் விளக்குவதெல்லாம், நல்லோரை அழிப் பதற்கும், தீயோரைக் காப்பதற்கும் பயன்பட்ட தாகவே யுள்ளது. இறைவனாகத் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்பவன் நேர் வழியாக எதையும் செய்யாமல்,