பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு பயங்கர ஏற்பாடு 71 வஞ்சகமாகவும் சூழ்ச்சியாகவும் ಆTಹತ್ತಲೂTಹಣ್ಣು செயல் புரிந்ததாகவே புராணங்கள் கூறுகின்றன். பெண்ணாசை கொண்டு சீதையைக் கடத்திச் சென்ற இராவணன் தீயவன் ஆகவே அவனைக் கொன்றதாகவும், அவனுடைய சிறையில் பல ஆண்டுகள் அடைபட்டிருந்த சீதை, கடைசிவரை கற்பரசியாக இருந்தாள் என்பதும் முன்னுக்குப் பின் முரணான கட்டுக் கதைகள். இராவணன் காமுக னாக இருந்திருந்தால், சீதை கற்பிழந்தவளாகத் தான் இருக்க வேண்டும். சீதை கற்பரசியாக இருந்திருந்தால், இராவணன் நல்லற வேந்தனாக இருந்திருக்கத்தான் வேண்டும்; இதிலேயே குழறு படியான வாதங்களைப் புரிபவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்பவர்களாவர், பிறரையும் ஏமாற்றுபவர் ஆவர். யுகந்தோறும் பிறந்து சாதித்த பாவச் செயல்கள் அனைத்தும் பரம் பொருளாக உள்ள ஒருவர் செய்த தாகக் கூறுவது, அறம் நிலை நிறுத்தவந்த ஒருவனுடைய செயல்கள் ஆகா என்பதே அறியத் தக்கது. - நான்கு வருணங்களைத் தானே யுண்டாக்கிய தாக (கீதை 7:18) கண்ணன் கூறுவது, அருளிச் செயல் அல்ல. இந்த உலகத்தில் என்றென்றும் வேற்றுமையை நிலை நிறுத்தவும், ஏற்றத் தாழ்வு என்னும் கொடுமையைத் தொடர்ந்து நடத்தவும்