பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 ைேத காட்டும் பாதை இந்தச் செயல் பேருதவியாக இருக்கிறது. மக்களில் ஒரு சாராரை உயர்வானவராகவும், பெரும்பாலோ ரை அடிமைகளாகவும் செய்யத் தக்க இந்த ஏற்பாட் டைத் தானே செய்ததாகக் கூறிக் கொள்பவன் மாபாதகனாக இருக்க முடியுமே தவிர மகேசனாக இருக்க முடியாது. உழைக்கவென்றே ஒரு பெருங் கூட்டத்தையும், அந்த உழைப்பை உறிஞ்சவென்றே ஒரு சிறு கூட் டத்தையும் நிலையாகச் செய்வதற்குப் பயன்படும் இந்த வருணாசிரம ஏற்பாடு, உலகத்திலேயே மிகக் கொடுமையான ஏற்பாடாகும். இந்த ஏற்பாட்டைத் தானே செய்ததாக ஒருவன் கூறிக் கொள்வானேயானால் அவன் பெரிதும் பழிக்கத் தக்கவனே யாவான்! ஞான யோகம் என்ற பெயரிலே கண்ணன் இங்கே கூறுகின்ற கருத்துக்கள் நன்னெறிக்கு மாறு பாடானவையாகக் காண்ப்படுகின்றன. யாகங்களைச் செய்ய வேண்டும் என்கிறான். யாகங்கள் என்பவை உயிர்க் கொலை புரியும் வேள்வி களாம். இந்த யாகங்களைத் திருவள்ளுவர் வன்மை யாகக் கண்டிக்கிறார். அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத் துண்ணாமை நன்று