பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு பயங்கர ஏற்பாடு 73 ஆயிரம் யாகங்களைச் செய்வதைக் காட்டிலும் மிக நன்மை பயப்பது, ஓர் உயிரையும் கொன்று தின்னா மையே யாகும். திருவள்ளுவர் போன்ற சான்றோர்கள் பழிக்கும் வினையைக் கண்ணன் கட்டாயமாகச் செய்யச் சொல்கிறான். ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை என்பது வள்ளுவர் வாக்கு! அறநெறிக்குப் புறம்பாக; மக்களைக் கொடுமைப் படுத்தும் வருணாசிரம முறையைத் தானே ஏற்படுத் தியதாகக் கூறிக் கொள்ளும் ஒருவன், தன்னைத் தானே பரம் பொருள் என்றும், தன்னால் தான் எல்லாம் நடப்பதாகவும் கூறிக் கொள்வது போற்றத் தக்கதாக இல்லை. சாதாரணமாகச் சிறிது நேரம் ஒருவனைத் துன் புறுத்துவதே பாவம் அல்லது கொடுமை என்றால், காலகாலத்துக்கும் பெருவாரியான மக்கள் கூட்டத் தை அடிப்படுத்தி அடிமைகளாய்த் தொழும்பர் களாய், வாழ வழியற்றவர்களாய், மேற்குலத்தார் களால் என்றும் நசுக்கி அழுத்தி வைக்கப்பட்டவர் களாய் இருக்கும்படியான ஒரு பயங்கரமான ஏற்பாட் டைச் செய்த - அருளற்ற செயல் செய்த ஒருவன் எப்படி ஒரு பரம் பொருளாக இருக்க முடியும். 房一5