பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ஏழு குழப்பங்கள் கீதையில் கண்ணன் சொல்வதாகக் கூறப்படும் சுலோகங்களில் பல விளக்கமற்றவையாகவும், பொரு எற்றவையாகவும், குழப்பம் ஏற்படுத்துவனவாகவும் உள்ளன; தான் என்ன சொல்லுகிறோம் என்ற உணர்வே யற்றுப் பேசுகின்ற ஒருவனுடைய சொற்களில் பொருள் இருக்காது. தான் என்ன சொல்ல நினைக் கிறோம் என்பது அவனுக்குப் புரியாது; தெளிவற்ற சொற்களில் சொல்லப்படும் அந்த சொற்றொடரைச் சொல்பவனும் விளங்கிக் கொள்ள முடியாது. கேட்ப வனுக்கும் புரியாது. இப்படிப் பல சுலோகங்கள் ஆங்காங்கே கீதை யில் காணப்படுகின்றன. நான்காவது அத்தியாயம் 18வது சுலோகம் இது போன்ற தன்மை உடையது. கர்மத்தில் அகர்மத்தையும், அகர்மத்தில் கர்மத் தையும் காண்போன் மக்களுள் மேதாவி, அவனே யோகி. அவனே எல்லாம் செய்து முடித்தவன்