பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழு குழப்பகிகள் 75 இதே சுலோகத்தை பாரதியார் நல்ல தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்; செய்கையில் செயலின்மையையும், செயலின்மையில் செய்கையையும் எவன் காண்கின்றானோ, அவனே மனிதரில் அறிவுடையோன்; அவன் எத்தொழில் செய்கையிலும் யோகத்திலிருப்பான். 一4:18 He who Seath Inaction in action, and action in Inaction, he is wise among man, he is has monious, even while performing all action. –Annie Besant பொருள் விளங்காத எல்லாம் வேதாந்தம் என்று நினைப்பவர்கள் - இது மிகப் பெரிய தத்துவம் என்று கூறுவார்கள். மேற்கண்ட சொற்களுக்கு என்ன பொருள் என்பது எனக்கு விளங்கவில்லை. சரி, நமது சிற்றறி வுக்குத்தான் விளங்கவில்லை போல் இருக்கிறது. மேதைகளின் அறிவுக்கு ஏதாவது விளங்கியிருக்க வேண்டுமே. -என்ற எண்ணத்தில் பல மேதைகளின் கருத் தை ஆராயும்போது, அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மேதாவிலாசத்துக்குத் தகுந்தபடி இந்த சுலோகத்துக்குப் பொருள் செய்ய முயன்றிருக் கிறார்கள்: எந்த மேதையாவது சரியாகப் பொருள் உரைத்திருக்கிறார்களா என்று பார்த்தால், ஒவ் வொரு மேதையும் ஒவ்வொரு பொருளைக் கூறு கிறார்கள்.