பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ንፀ கீதை காட்டும் பாதை பரமாத்மா சொன்னது பொருள் இல்லாமல் போகுமா என்ற கருத்தில் ஒவ்வொருவரும் பொருள் கூற முற்பட்டிருப்பதால், யாருடைய பொருளும் பொருத்தமாகவும் இல்லை; ஒன்று போலவும் இல்லை. ஆதிசங்கரர் இராமானுஜாசாரியர் மத்வாசாரியர் சீதரர் விவேகானந்தர் இராம கிருஷ்ண பரம அம்சர் சித்பவானந்தர் சமய உலகில் பெரும் புகழ் பெற்ற இந்த மேதைகள் ஒவ்வொருவரும் கூறியுள்ள விளக்கங்கள் கீழே தரப் படுகின்றன. அஞ்ஞானியானவன் தேகத்தைத் தான் என்று வைத்துக் கொள்கிறான். பிரகிருதியின் செயலை ஆத்மாவின் மீது ஆரோபிக்கிறான். இத்தகையவன் ஒரு செயலும் செய்யாது கம்மா இருந்தாலும் அகங்காரமும் க்ர்த்ருத்வமும் அவனிடம் இருக்குமளவு அவன் கர்மம் செய்பவனே யாகிறான். இந்த அக்ஞான நிலை அகர்மத்தில் கர்மம் என்பதாகும். ஆத்மசொரூபத்தை அறிந்த ஞானிக் த அகங்காரமில்லை. அவனது உடல் ஓயாது வேலை செய்தாலும் ஆத்மா சாட்சி யாய் இருக்கிறது. உடல் செய்யும் கர்மமெல்லாம் ஆத்மா வைச் சேர்வதில்லை. கர்மத்தில் அகர்மம் என்ற ஒரு நிலை யாகும் இது. இது சங்கர பாஷ்யம் தேகம் வேறு ஆத்மா வேறு என்ற திரிபு வாதம் இது.