பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 கீதை காட்டும் பாதை ஜீவனைப் பந்தப் படுத்துவது கர்மம். அகங்கார மமகார மற்று ஈகவரார்ப்பணமாகச் செய்யும் கர்மம் மனிதனைப் பந்தப் படுத்துவதில்லை. இது கர்மத்தில் அகர்மம் ஆகும். சோம்பலால் நல்வினை செய்யாமல் இருப்பின் கேடு உண் டாகிறது. நல்வினை செய்யாதிருப்பது அகர்மம். அதனால் விளையும் கேடு கர்வம். இது அகர்மத்தில் கர்மம் ஆகும். -ழரீதர பாஷ்யம் குழப்பத்திற்கு இன்னொரு குழப்பம் சரியான விளக்கம் தான். × JK X பல வேலைகளுக்கு நடுவிலும் மனது ஒரே நிலையில் அமைதியாய் இருப்பது கர்மத்தில் அகர்மம். எந்த வேலையும் செய்யாமல் அமைதியாகத் தியானத்தில் இருக்கும் போது மனம் தொடர்ந்து ஈசுவரனை நினைத்துக் கொண்டிருப்பது அகர்மத்தில் கர்மம். -விவேகானந்தர் அமைதியாய் இருப்பதற்கே இரண்டு விளக் கங்கள்! X X X அர்ச்சுனன் வில்லையும் அம்பையும் எறிந்துவிட்டு செய லற்றவனாக இருக்கிறான். அவன் மனமோ துன்பத்தில் உழல் கிறது. இந்த நிலை அகர்மத்தில் கர்மமாகும். கிருஷ்ணர் தேரை ஓட்டிக் கொண்டிருக்கிறார், அவருடைய மனம் மலைபோல அசையாமல் சாந்தியாய் இருக்கிறது. இது கர்மத்தில் அகர்மம். -இராம கிருஷ்ணர் எடுத்துக் காட்டிற்கு எங்கும் அலையாமல் பாரதப் போர்த் தொடக்கத்தையே எடுத்துக்