பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழு குழப்பங்கள் 79 கொண்டிருக்கிறார். மனமும் செயலும் ஒன்று படாமல் இருப்பதையே விளக்கமாகத் தருகிறார். X X X - ஒடும் இரயிலில் இருப்பவன் வெளியில் அசையாமல் இருக்கும் மரங்கள் எதிர் திசையில் ஒடுவது போல் காண் கிறான். இது அகர்மத்தில் கர்மம். - கடலில் ஒடிக் கொண்டிருக்கும் கப்பல் கரையில் இருப்பவ னுக்கு ஒரே இடத்தில் நிற்பது போல் காணப்படுகிறது. இது கர்மத்தில் அகர்மம், அஞ்ஞானத்தினால் கரிமம் அகர்மமாக வும் அகர்மம் கர்மமாகவும் காணப்படுகின்றன. -சித்பவானந்தர் மாயத் தோற்றமே இங்கு விளக்கமாகக் கூறப் படுகிறது. X X 愿 ஒரு கீதைக்கு ஏழு விளக்கம். ஏழும் ஏழு விதம். ஏழு விளக்கங்களும் படித்த பிறகு எட்டாவதாக ஒன்றை முயலத் தோன்றுமே தவிர ஏழு விளக்கத்தி லும் பொருள் எட்டி விட்டதாகக் கூற முடியாது. ஒரு செயலைச் செய்யும் போது, மனம் ஒன்றிச் செயல் புரிய வேண்டும். அப்போது தான் அந்தச் செயல் வெற்றிபெறும். ஆனால் இங்கே மனம் ஒன்றாத ஒரு செயலை வைத்துக் கொண்டு கர்மத் தில் அகர்மம் அகர்மத்தில் கர்மம் என்று பேதப் படுத்தி, ஒரு பைத்தியக்காரத் தனமாக சொற்றொ டரை சுலோகமாக்கி எல்லாரையும் குழப்பியிருக் கிறது. கீதை.