பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 கீதை காட்டும் பாதை புலவர் ஒருவரிடம் கேட்டேன். இவ்வளவு படித்த பிறகும் ஒன்றும் புரியவில்லையே. முழுக்க முழுக்கக் குழப்பமாய் இருக்கிறதே. கீதைக்குத்தான் பொருள் புரியவில்லை. அதற்குப் பொருள் சொன்னவர்களின் பொருளும் புரியவில்லையே என்றேன். நம்பிக்கை என்று ஒன்று வேண்டும். ஆத்மா வில் உனக்கு நம்பிக்கையில்லை. அதனால் பொருள் விளங்கவில்லை. நான் சொல்லுகின்றேன். ஒருவன் செயல் செய்யும் போது அவன் ஆத்மா செயல்படாமல் இருந்தால் அது கர்மத்தில் அகர்மம். ஒருவன் சும்மா யிருக்கும் போது ஆத்மா செயல் பட்டால் அது அகர்மத்தில் கர்மம் என்றார். இதுவும் புரியவில்லையே என்றேன். பொருள் புரிவதாக நம்ப வேண்டும். நம்பிக்கை யில்லாவிட்டால் புரியவே புரியாது. பெரிய பெரிய மகான்கள் புரியாமலா பொருள் சொல்லி யிருப்பார் கள் என்று கேட்டார் அந்தப் புலவர். மகான்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி யல்லவா பொருள் கூறுகிறார்கள். எதுவும் ஒரே மாதிரியாக இல்லையே! ஒரு கீதைக்கு ஏழு மாதிரி யான விளக்கமா? என்றேன்.