பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழு குழப்பங்கள் 81 அவரவர் கொள்கைக்குத் தகுந்த மாதிரிதான் விளக்கம் சொல்வார்கள். கொள்கை ஒன்று இல்லை என்றால் விளக்கமே கிடைக்காது என்றார் புலவர். கர்மத்தில் அகர்மம் அகர்மத்தில் கர்மம் - தலை சுற்றுகிறது. இப்படி ஒரு கீதையை அருளிச் செய் தார் பகவான். பகவான் பெயரில் சுலோகத்தை எழுதியவர் வியாச பகவான். வியாச பகவானும் எழுதவில்லை. இடையில் யாரோ சேர்த்து விட்டது தான் கீதை என்றொரு சாரார் கூறுகின்றனர். வேள்வி செய்வதை வலியுறுத்திப் பல கீதை சுலோகங்கள் காணப்படுகின்றன. வேள்வியில் மிஞ்சிய அமுதை உண்போர் என்றும் உள தாகிய பிரமத்தை எய்துகிறார்கள். வேள்வி செய்யாதோ ருக்கு இவ்வுலகம் இல்லை. அவர்களுக்குப் பரலோகம் ஏது? - கீதை 4 : 31 அர்ச்சுனன், பாவிகளுக்கெல்லாம் பெரும் பாவி யாகச் சித்தரிக்கப் படுகிறான். அந்த சுலோகம் இது தான். பாவிகளெல்லாரைக் காட்டிலும் நீ அதிக பாவியாக இருந்தாலும், அப்பாவத்தை யெல்லாம் ஞானத் தோணியால் கடந்து கொள்வாய்! -கீதை 4 : 36 கவனமில்லா விட்டாலும், ஊதுகிறவரை ஊதட்டும் என்று பொறுமையாகக் கேட்டுக் கொண் டிருந்த பார்த்தனுக்கு இந்தப் பாவிப்பட்டம் வேண்டி யது தான்.