பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 கீதை காட்டும் பாதை எந்தச் செயலையும் ஆராய்ந்து தெளிவதே ஞானம் என்று நாம் நம்புகிறோம். ஆனால் ஆராயா மல் நம்புவதையே அறிவு என்று கீதை சொல்கிறது. அறிவும் சிரத்தையும் இன்றி ஐயத்தை இயல்பாகக் கொண்டோன் அழிந்து போகிறான். ஐயம் உடையோனுக்கு இவ்வுலகம் இல்லை. மேலுலகும் இல்லை. இன்பமும் இல்லை. -கீதை 4 : 40 அஞ்ஞானத்தால் தோன்றி நெஞ்சில் நிலை கொண்டிருக் கும் இந்த ஐயத்தை உன் ஞான வாளால் அறுத்து யோக நிலை கொள். எழுந்து நில்! Q£ -கீதை 4 : 42 எதிலும் ஐயம் கொண்டு ஆராய்ந்து தெளிவது தான் அறிவுடைமை என்று பொதுவாகக் கருது கிறோம். ஐயம் அஞ்ஞானத்தில் தோன்றுகிறது என்கிறார் கீதாசாரியார். ஐயத்தை ஞான வாளால் அறுத்தெறிய வேண்டும் என்கிறார். ஞான வாள் என்பது என்ன? ஆராயாமல் நம்புவதா? அதற்கு ஞான வாள் என்ற பெயர் பொருந்துமா? ஐயத்தின் நீங்கித் தெளிய வேண்டும் என்கிறார் வள்ளுவர். எப்பொருள் எத்தன்மை தாயினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்ப தறிவு என்று ஆராய்ந்து தெளிவதையே சிறப்பாகக் கூறுகிறது திருக்குறள். ஆராய்ந்து தெளிவது