பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழு குழப்பங்கள் 83 தானே அறிவாக இருக்க முடியும். ஐயம் தானே ஆராயும் முயற்சியைத் தூண்டுகிறது. அறிதோறும் அறியாமை கண்டற்றால் என்பது குறள். ஒவ்வொரு முறையும் நாம் ஆராய்ந்து அறிவு பெறும் போதெல்லாம் இதுவரை நாம் கொண் டிருந்த அறியாமை புலப்படுகிறது என்கிறார் திருவள்ளுவர். ஐயம் கொண்டு ஆராயா விட்டால் நாம் அறிவு பெற்று, அறிவு பெறும் போதெல்லாம் முன்னிருந்த அறியாமையை உணர முடியாது. குறளின் கருத்துக்கு நேர்மாறாக, ஐயம் அஞ் ஞானத்தால் தோன்றுகிறது என்று கீதை கூறு கிறது. அஞ்ஞானத்தை அகற்றி ஞானத்தைப் பெறுவதற்கு கருவியாக இருப்பது தான் ஐயம். ஐயம் தான் ஞானம் பெறுவதற்கு அச்சாணி என்பதை மறந்து மறுக்கிறது. கீதை,