பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 நானே உயர்ந்தவன் கண்ணன் பேசப் பேச அர்ச்சுனனுக்கு எதுவும் புரியவில்லை. ஒரு செய்தியைக் கூறும் போது அய்யம் அகற்றித் தெளிவு உண்டாக்குவது சிறப்பு. ஆனால், கூறக் கூறக் குழப்பம் உண்டாகிற தென்றால், கேட்பவனுக்கு அதைப் புரிந்து கொள் ளும் ஆற்றல் இல்லாமல் இருக்க வேண்டும். அல்லது, சொல்பவனுக்குத் தெளிவாகச் சொல்லத் தெரியாமல் இருக்க வேண்டும். இரண்டு பேரில் யாராவது ஒருவர் சரியில்லை யென்றாலும், அந்தப் பேச்சு வீண் பேச்சாகவே போய் விடும். சொல்லுகிறவன் ஆற்றல் வாய்ந்தவனாக இருந்தால், தான் நினைக்கிற செய்தியைக் கேட்ப வனுக்கு எளிதாக உணர்த்தி விட முடியும். பேசும் ஆற்றல் வாய்ந்தவர்கள், தங்கள் பேச்சின் மூலம் எத்தனையோ பெரிய செயல்களைச் செய்து முடித் திருக்கிறார்கள். அதனால், நாட்டுக்கும் உலகுக்குமே பல நன்மைகள் தோன்றி யிருக்கின்றன.