பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நானே உயர்ந்தவன் 85 அந்த ஆற்றல் இல்லாதவர்கள், வாயை மூடிக் கொண்டிருந்தாலே நன்மை யுண்டாகும். திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனின் ஊங்கு இல் என்றும், சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லும் சொல் இன்மை அறிந்து என்றும், பேச்சுத் திறமை பற்றித் திருவள்ளுவர் பேசுவார். நெடுநேரம் கண்ணன் பேசியதைக் கேட்ட பிறகு, அர்ச்சுனன் ஒரு கேள்வி கேட்கிறான். அதிலேயே அவன் எவ்வளவுக்குப் புரியாமல், புரிந்து கொள்ள முடியாமல் தவித்துப் போயிருக்கிறான் என்பது புரிகிறது. கண்ணா, செய்கைகளின் துறவைப் புகழ்ந்து பேசுகிறாய்; பின்னர் அவற்றுடன் கலப்பதைப் புகழ்கிறாய். இவ்விரண் டில் எது சிறந்தது என்பதை நன்கு நிச்சயப்படுத்திச் சொல். -கீதை 5 : 1 இதையும் அதையும் சொல்லி என்னைக் குழப் பாதே; எதையாவது உறுதியாகச் சொல்லித் தெளிய வை என்பது தான் அர்ச்சுனன் கேள்வியின் பொருள். அர்ச்சுனன் கேள்வி தெளிவாகவே இருக்கிறது. இந்தக் கேள்விக்காவது உருப்படியான பதில் வருகிறதா என்று எதிர் பார்க்கிறோம்.