பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$6 ைேத காட்டும் பாதை பதில். பகவான் சொல்லுகிறான்; துறவு, கர்மயோகம் இவ்விரண்டும் உயர்ந்த நலத்தைத் தருவன. இவற்றுள் கர்மத் துறவைக் காட்டிலும், கர்ம யோகம் மேம்பட்டது. -கீதை 5 : 2 லாங்கியத்தையும், யோகத்தையும் வெவ்வேறென்று சொல்வோர் குழந்தைகள்; பண்டிதர் அங்ங்ணம் கூறார். இவற்றில் யாதேனும் ஒன்றில் நன்கு நிலை பெற்றோன் இரண்டின் பயனையும் எய்துகிறான். -கீதை 5 : 4 இடது பக்கம் போக வேண்டுமா? வலது பக்கம் போக வேண்டுமா? சரியாகச் சொல் என்கிறான் அர்ச்சுனன். இடது வலது என்று வேறு படுத்துவது அறியாமை. ஏதேனும் ஒரு பக்கம் போனால், இரண்டு பக்கமும் போன பலன் கிடைக்கும். இப்படி இருக்கிறது பகவான் பதில். தொழிலைச் செய்து கொண்டே யிரு. பலனை எதிர்பார்க்காதே. ஏதேனும் ஒரு திசையில் சென்று கொண்டேயிரு. போய்ச் சேரும் இடத்தைப் பற்றிக் கவலைப்படாதே - இப்படிப்பட்ட உபதேசங்கள் பகவத் கீதையில் தொடர்ந்து பார்க்கலாம். செய்கைகளை யெல்லாம் பிரம்மத்தில் சார்த்தி விட்டுப் பற்றுதலை நீக்கி எவன் தொழில் செய்து கொண்டிருக்கிறா னோ, அவன் நீரில் தாமரையிலை போல பாவத்தால் தீண்டப் பெறுவதில்லை. -கீதை 5 : 1.0