பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தானே உயர்ந்தவன் 87 இதே கருத்தை இன்னொரு மாதிரியாகவும் கண்ணன் கூறுகிறான். பிரம்மத்தில் புத்தியை நாட்டி, அதுவே தாமாய், அதில் நிஷ்டை யெய்தி, அதில் ஈடுபட்டோரி, தம்முடைய பாவங் களெல்லாம் நன்கு கழுவப் பெற்றோராய், மீளாப் பதமடை கிறார்கள். - கீதை 5 : 17 பாவங்கள் கழுவப் பெற வேண்டுமானால் மேலும் பாவச் செயல்களைச் செய்யாமல் அறவழி யில் நிற்றல் வேண்டும் என்றுதான் சான்றோர் கூறுவர். தீயவை தீய பயத்தலால் தீயவை தியினும் அஞ்சப் படும் என்றும் 3. ஒல்லும் வகையான் அறவினை ஒவாதே செல்லும் வா யெல்லாம் செயல் என்றும் ஒரு நல்ல வழியை வள்ளுவர் காட்டுகிறார். கண்ணனோ, பாவம் நீங்க பிரமத்தில் புத்தியை நாட்ட வேண்டும் என்கிறான். மேலும் அர்ச்சுனனை யோகி யாகும்படி கூறுகிறான். அர்ச்சுனன் மனத்தைக் கட்ட முடியாது என்றும் அது மிக அரிய செயல் என்றும் கூற, பழக்கத்தாலும் விருப்பமின்மையாலும் கட்டி விடலாம் என்கிறான். ஒருவன் யோகத்தில் முயல வேண்டும் என்றும், பல பிறவிகளில் முயன்றால் அதன் பயனாகப் பரகதியை அடையலாம் என்றும் கூறுகிறான்.