பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 கீதை காட்டும் பாதை பரமாத்மாவான அவனல்லாத மற்ற எளிய ஆத் மாக்கள் தங்கள் முற்பிறப்பு, பிற்பிறப்பு பற்றிய செய்திகளை அறிய இயலாது என்று கூறியிருக் கிறான். அப்படியிருக்கும் போது பிறவிதோறும் தொடர்ந்து முயற்சி செய்வது எப்படி என்பதற்கு விளக்கம் இல்லை. ஆத்மாக்கள், பரமாத்மாவான தன்னையே இறுதியில் வந்து அடைய வேண்டும் என்கிறான். பரமாத்மாவான தன் பெருமைகளைக் கூறத் தொடங்குகிறான். தன்னை மிக உயர்ந்தவனாகக் கூறிக் கொள் கிறான். உலகில் உள்ள ஒவ்வொரு பொருளிலும் தானே உயர்ந்த பொருள் என்பதைப் பல எடுத்துக் காட்டு களால் கூறுகிறான். வேதங்களில் கூறப்படும் பிரணவம் தானே என்கிறான். யோகிகளின் தவமாகவும், ஆண்களின் ஆண் மையாகவும், வானில் ஒலியாகவும், ஒளியாகவும், அறிவாகவும், வலிமையாகவும், உயிர்களின் மூச்சாக வும் இப்படி ஒவ்வொன்றின் உயர் தன்மையாகவும் தான் இருப்பதாகக் கூறிக் கொள்கிறான். தானே உலகத்தின் தாயும் தந்தையும் எல்லா மாகவும் இருப்பதாகச் சொல்கிறான்.