பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நானே உயர்ந்தவன் 89 மூன்று வேதங்களும் தானே என்று கூறுகிறான். (பகவத் கீதை தோன்றிய காலத்தில் நான்காவது வேதம் தோன்றவில்லை) உலகத்தின் தொடக்கமும் முடிவும் தானே என்கிறான். இயற்கை சக்திகள் அனைத்தும் தானே என்கிறான். மீண்டும் மீண்டும் தான் எல்லாவற்றிலும் உயர்ந்தவன் என்பதைப் பல எடுத்துக் காட்டுகளால் கூறிக் கொள்கிறான். மரங்களில் அரசமரம், குதிரைகளில் உச்சை சிரவம், யானைகளில் ஐராவதம், பசுக்களில் காம தேனு, அனந்தன், வருணன், யமன், விலங்குகளில் சிங்கம், மீன்களில் சுறா, ஆறுகளில் கங்கை. பருவங் களில் இளவேனில், மாதங்களில் மார்கழி, எழுத்துக் களில் அகரம், புகழ், பிறப்பு , மரணம் எல்லாம் தானே என்று தன்னை மிக உயர்ந்த பொருள் என்று கூறி முடிக்கிறான். தன்னை வந்து அடைந்தவர்களுக்கு, மறு பிறப்பு இல்லை என்றும், உயிர்கள் தன்னை வந்து அடைவதே இறுதி யென்றும் கூறுகிறான். எதெது பெருமையுடைத்து. எதெது உண்மை யுடைத்து எதெது அழகுடைத்து, எதெது வலிமை யுடைத்து அது வெல் லாம் என் ஒளியின் அம்சத்தில் பிறந்ததென்று உணர்வாயாக. -கீதை 10:41 俄一6