பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 கண்ணன் பேருருவம் இதுவரை ஐயம் கொண்டு கேள்விகளைக் கேட்டுக் கொண்டு வந்த அர்ச்சுனன், தன் ஐயம் தீர்ந்து விட்டதாகக் கூறுகிறான். கண்ணன் பெரு மையை அறிந்து விட்டதாகக் கூறுகிறான். ஒருவனைப் பற்றி அறியும் முன் ஐயம் கொண்டு ஆராய வேண்டும். அவனை நன்கு அறிந்த பிறகு அவன் மீது சிறிது கூட ஐயம் தோன்றக் கூடாது. இங்கே அர்ச்சுனன் கண்ணன் பெருமையை உணர்ந்து விட்டதாகக் கூறுகிறான். அதே சமயம் கண்ணனுடைய கடவுள் வடிவத்தைக் காண வேண்டும் என்று கூறுகிறான். நேரில் பார்த்தால் ஒழிய நம்ப மாட்டேன் என் பதை அர்ச்சுனன் நயமாகக் கூறுகிறான். இதிலி ருந்து அவன் ஐயம் அறவே தெளியவில்லை என்பது தெரிகிறது. அவன் அய்யத்தைத் தவிர்க்க முன் வருகிறான் கண்ணன். தன் கடவுள் வடிவத்தைக் காட்ட ஒப்புக் கொள்கிறான்.