பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 ைேத காட்டும் பாதை அர்ச்சுனன் ஊனக் கண்ணால் அந்த வடிவத் தைப் பார்க்க இயலாது என்பதால் அவனுக்குக் கண்ணன் ஞானக் கண் ஒன்றைக் கொடுக்கிறான் கடவுளுக்கு உருவம் இல்லை என்ற கொள்கை யுள்ளவர்கள் இங்கே கண்ணையும் கருத்தையும் மூடிக் கொள்ள வேண்டும். கடவுளுக்கு உருவம் உண்டு; அதை ஞானக் கண்ணால் தான் பார்க்க முடியும்; அந்த ஞானக் கண்ணைத் தரும் சக்தி படைத்தவன் கண்ணன் ஒரு வனே என்பதை ஒப்புக் கொண்டவர்கள் தான் கீதையை ஒப்புக் கொள்ள முடியும். ஏற்கெனவே கீதை முதல் அத்தியாயத்தில் சஞ்சயனுக்கு ஞானக் கண்ணை வியாச முனிவர் கொடுத்திருக்கிறார். வியாச பகவான் என்று அழைக்கப்படும் அவர் அருளிய ஞானக் கண்ணுக்கும், கண்ணன் அர்ச்சுனனுக்குக் கொடுக்கும் ஞானக் கண் னுக்கும் ஒரு வேற்றுமை யுண்டு. வியாசர் அருளிய ஞானக் கண் தொலை தூரத்தில் நடக்கும் நிகழ்ச்சி களைக் காணவும் கேட்கவும் கொடுக்கப் பட்டது. கண்ணன் பார்த்தனுக்குக் கொடுக்கும் ஞானக் கண் கடவுள் வடிவத்தைக் காணத் துணைபுரிவது. போர்க் களத்திலே இரண்டு படைகளுக்கும் நடு விலே கண்ணனும் பார்த்தனும் இருக்கிறார்கள். அந்த நிலையில் அங்கு போர் செய்ய அணியமாக