பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன் பேருருவம் 93 நிற்கும் அத்தனை பேருக்கும் நடுவிலே, போர் தொடங்கி விட்டதற்கு அறிகுறியாக அம்புகள் பறந்து கொண்டிருக்கும் நிலையிலே, கண்ணன் தன் கடவுள் வடிவத்தை அர்ச்சுனனுக்கு மட்டும் இரகசிய மாகக் காட்டிக் கொண்டிருக்கிறான். இந்த இரகசிய ஏற்பாட்டுக்குத் தான் ஞானக்கண் பயன்பட்டிருக் கிறது. ஊனக் கண் மட்டுமே படைத்த அத்தனை படை களாலும் பார்க்க முடியாத கண்ணன் வடிவத்தை அர்ச்சுனன் மட்டும் ஞானக் கண்ணால் பார்க்கிறான். அர்ச்சுனன் பார்த்த அந்த ஞானக் காட்சியை நாமும் அறிந்து கொள்ளுமாறு வியாசர் பகவத் கீதையில் படம் பிடித்துக் காட்டுகிறார். நாமும் அர்ச்சுனன் பார்த்த அந்தக் காட்சியைக் காணப் பின்வரும் சுலோகங்கள் உதவுகின்றன. அர்ச்சுனா, இன்று, இங்கே என் உடலில் சராசரமான உலக முழுவதும் ஒருங்கு நிற்பதைப் பார்! இன்னும் வேறு எதைக் காண விரும்பினும் அதை இங்கே பார். -கீதை 11 : 7 உன்னுடைய இயற்கையான இந்தக் கண்களால் என்னைப் பார்க்க முடியாது. உனக்கு ஞானக் கண் கொடுக் கிறேன். என்னுடைய ஈசுவர யோகத்தைப் பார். -கீதை 11 : 8 யோகம் என்ற சொல்லை வியாசர் பல பொருள் களில் கையாளுகிறார். இங்கே யோகம் என்றால் வடிவம் என்று பொருள் கொள்ள வேண்டும்.