பக்கம்:குக்கூ.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

தலைநகர் தலைநகர்தான்
ஆளுயரச் சுவரொட்டியில்
ஒன்றேனும்
காண முடியுமா....
இந்தப் பட்டி தொட்டியில்.


36

துருபதன் மகளை
நிருவாணக் கோலத்தில்
நிறுத்த நினைத்த
நீசர்க் கெதிராய்க்
கண்ணன் கொடுத்த துகில்,
இன்னுமா நீள்கிறது
குற்றாலத்தில்?

40 ◯ குக்கூ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/41&oldid=1233677" இலிருந்து மீள்விக்கப்பட்டது