பக்கம்:குஞ்சாலாடு.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. குஞ்சாலாடு சிவன் வெகுண்டார். என்ன கவனிப்பது t கான் நெற்றிக்கண்ணுல்......... * ஒன்றும் செய்துவிட முடியாது' என்ருன் மனிதன். ஒன்றும் செய்ய முடியாதா?’ சிவனுக்கு கோபம் மீசையையும் தாடியையும் துடி துடிக்கச் செய்தது. ஆனல் அந்த ஆசாமி புன்னகையுடன் சொன்னன்: ஆமாம். ஒன்றும் செய்யமுடியாது. நீங்களே சிகரெட் பிடிக்க வேண்டுமென்று விரும்பினல், அதைப்பற்ற வைக்கக்கூட உபயோகப்படாது ஸ்வாமி!” என்று, 'மனிதவர்க்கம் எங்களே இவ்வளவு கேவலமாகவா மதித்துவிட்டது!’ என்று பெருமூச்செறிந்தார் சிவன், விஷ்ணு குறுக்கிட்டு எங்களை என்பானேன்? உம்மை மட்டும் என்று குறிப்பிடும் என்று பாகிஸ்தான் பண்ணப் பசர்த்தார். அங்த மனிதனே எல்லோரும் ஒர் இனம். எல்லோரும் ஓர் குலம். எல்லோரும் ஒர் கிறை தான் ஸ்வாமி!' என்ருன். "நீங்களே எல்லாவற்றையும் கண்டுவிட்டுச் சொல்வீர் கள்!’ அதற்காகத் தான் வந்தாயிற்றே. இனி எங்கே போக வேண்டும்?' என்று உறுமினர் சிவன். தங்கள் சித்தம். என் பாக்கியம்' என்ருன் அவன். 'விளேயாடாதே. செய்யவேண்டியவற்றுக்கு திட்ட மிடுவது உன் பொறுப்பு' என்ருர் கடவுள். அப்படியென்ருல் இப்பொழுது காப்பி சாப்பிடப் போகவேண்டும்.” 'காப்பியா! அதென்ன? 'உங்கள் தேவலோகத் தி ல் சர்வசாதாரணமாக வழங்கப்படும் ஸோமரசம் போல ஒரு பானம் என்று மனிதன் விளக்கினன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/10&oldid=800269" இலிருந்து மீள்விக்கப்பட்டது