பக்கம்:குஞ்சாலாடு.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

களிமண்

'என்ன தேடுகிறீர்கள் ஸ்வாமி?'

'களிமண்'

அதற்தள் மேல்மாடி காலியாகி விட்டதா'

அப்பொழுது தான் தலைநிமிர்ந்து பார்த்தார் அவர். அப்படிப் பேசியவர் யார் என்று நிர்ணயிக்கும் முன்னரே அவர் வாய் முனகியது: 'புரியவில்லையே!'

'அது தான் சொன்னேனே!'

'என்ன? '

'மேல் மாடி காலி என்று'

'அப்படியென்றால்?'

'ஹூம், நாலு தலைகளில் ஒன்றில் கூடவா மூளை இல்லாமல் தட்டுப்பாடு ஏற்படவேண்டும்! பாபம்' என்று அனுதாபப்பட்டான் அங்கு தலைகாட்டிய பேர்வழி.

'களிமண் எங்கே, இங்கு வைத்துவிட்டுப் போயிருந்தேனே, என்று கேட்டால் என்னவோ உளறுகிறாயே நீ யார்?' என்று அதட்டலாகக் கேட்டார் நான்முகன்.

நான் யார் என்கிற கேள்விக்கு வேதாந்த விற்பன்னர்கள் கூட இன்னும் விடைகாண வில்லையாம் ஸ்வாமி'

'சட் அதிகப்பிரசங்கி'

'அது கிடக்கிறது. களிமண் ஏன் ஸ்வாமி?' என்று வம்புக்கிழுத்தான். அழையா விருந்தாய் நுழைந்திருந்த அதிதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/13&oldid=1117116" இலிருந்து மீள்விக்கப்பட்டது