பக்கம்:குஞ்சாலாடு.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிருஷ்ண பிள்ளை 2重 பற்களோடு பிறந்திருப்பது கல்லதல்ல என்ருர்கள் இலர். ரொம்ப நல்லது என்ருர்கள் சிலர். வருங்காலத் தில் எடுத்ததெற்கெல்லாம்திரிக்கப்போவதை அறிவிப்பது போல் அப்பொழுதும் பல்லேக் காட்டிக்கொண்டு தான் கிடந்தது குழந்தை. குழந்தை ஒரு நாடோடிப் பாடகளுகி யிருந்தால் நான் பிறந்தது வெள்ளிக் கிழமை - ராஜா தேசிங்கு ! என் குதிரை பிறந்தது வெள்ளிக் கிழமை-ராஜாதேசிங்கு! என் கத்தி பிறந்தது வெள்ளிக் கிழமை - ராஜா தேசிங்கு!” என்ற தேசிங்கு ராஜன் பாடலின் சுவட்டிலே பாடிக் களித்திருக்கலாம். கான், பிறந்தது வெள்ளிக் கிழமை - முத்து மாரியம்மா ! என் பல் பிறந்தது வெள்ளிக் கிழமைமுத்து மாரியம்மா நான் என்ன செய்வது பல்லேக் காட் டாமல் - முத்து மாரியம்மா!' என்று பாடத் தெரியாமல் கிருஷ்ண பிள்ளே அழுது அழுதே வளர்ந்ததாக சரித்திரம் கூறுகிறது. அது கூட அவர் பெரிய மனிதராகவேண்டியவர் என் பதைத் தான் பிரகடனம் செய்தது போலும் பெரிய மனிதர் ஆவதற்கு அத்தியாவசியமான குணங்களான அகம்பாவமும், பிடிவாதமும் அவருக்கு இரு ங் த ன என்று அவரே அடிக்கடி சொல்லிக்கொள்வது உண்டு. அந்த இரண்டு குணங்களும் அவர் கூடப்பிறந்த இரண்டு. பற்களுக்கும் இருந்தன. அவற்றுக்குப் பிறகு முளைத்த பற்கள் விழுந்தும் முளேத்தும் மறுமலர்ச்சித் தத்துவத்தை கிரூபித்துக்கொண்டிருக்க, இந்த இரண்டு பற்கள் மட்டும் பிடிவாதமாக பிடித்து வைத்த பிள்ளையார் போல்-ஆடா மல் அசையாமல் இருந்தன. இதை சகிக்காத கிருஷ்ண பிள்ளை அந்த நகைச் சுவைச் சின்னங்களுக்கு கல்தா' கொடுத்ததும் ஒரு வெள் ளிக் கிழமையில் தான். வெள்ளிக் கிழமை மாலை. பிள்ளையார் கோவிலில் ஏகப்பட்ட கூட்டம். பக்தர்கள் தேங்காய்களே வெடலே’ போட்டார்கள். உடைபட்டுச் சதிராடிச் சிதறும் சில்லு களைப் பொறுக்கத் தயாராக தார் பாச்சி வேட்டியைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/27&oldid=800286" இலிருந்து மீள்விக்கப்பட்டது