பக்கம்:குஞ்சாலாடு.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிருஷ்ண பிள்ளை 23; பின்னுல் இரவு முழுவதும் பம்மிக் கிடந்து செத்துப் போறேன். சாகப் போறேன்' என்று உருப்போட்டும் கூட "தற்கொலை வெற்றிகரமாக முடியவில்ல்ை: இதை எண்ணியபோது தான் விழுந்து விழுந்து சிரிக் கத் தொடங்கினர் கிருஷ்ண பிள்ளை. அந்தச் சிரிப்புதான் அவரது வாழ்க்கைக் கனவின் திறப்பு விழா! லட்சியத்தின் அஸ்திவாரம்: இப்படி சிரித்தும் சிரிக்கப்பட்டும் வாழ்க்கை நடத்திய கிருஷ்ண பிள்ளை வேறு தொழில் புரிய உடம்பு வளையாத தால் புளுகுவதையே பிழைப்பாகக் கொண்டார். புளுகு வதை அழகாக, அற்புதமாக, கனவாக, ஒயிலாக - இன் னும் எப்படி எப்படியெல்லாமோ!-புளுகிளுல் பொழுதும் போகிறது! புகழும் வருகிறது' என்று கண்ட அவர் அதையே வாழ்க்கையாக்கிக்கொண்டதில் வியப்பில்லே, அதன் மூலம் சிரிக்கவும் அவருக்கு அதிகமான சான்ஸ்’ கிடைத்தது. அப்புறம் என்ன! இந்த ரீதியிலே வாழ்ந்த கிருஷ்ண பிள்ளை ஒரு நாள் செத்துப்போனர். எல்லோரும் சாகவேண்டியது தான் என்ற நியதிப்படியே! ஆனால் அவர் ஆத்மா முனங்கியது! "நான் சாகவில்லை. வெயில் என்னைச் சுடாது. மழை என்னே கனக்காது. தி என்னே எரிக்காது. நானே நான். கான் சிரிக்கிறேன். இப்படித்தான் பகவான் கிருஷ்ணன் கீதை யிலே சொல்லியிருப்பதாகக் கேள்வி! அப்படி கடக்கா விடில் எல்லாம் பொய்யாகிவிடும். ஆமாம்!” என்றது. அது மேலும் சொன்னது: "நான் அமரன். கினைத்த உடனேயே சைத்தான் முன்னல் வந்து கிற்கிருன் என் பதைப் போல நான் பலமுறை கடந்திருக்கிறேன். என்னேப் பற்றிப் பேச ஆரம்பிக்கிறவர்கள் மு ன் னி .ே ல கான் தோன்றியிருக்கிறேன். உடனே அவர்கள் உனக்கு ஆபுசு நூறு வருஷம் என்று சாபம் கொடுத்ததுண்டு. எத் தனையோ பேர் எத்தனையோ தடவைகள் சொல்லியது உண்டு. சிலர் தான் எமன் எமாந்தால் என்றும் சேர்த்து முனங்கினர். ஆமாம். எமன் என்ஏமாறக்கூடாது எண்ணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/29&oldid=800288" இலிருந்து மீள்விக்கப்பட்டது