பக்கம்:குஞ்சாலாடு.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| حجدِلاسہ நடுநிசி நகரம் இரவு வேளையிலும் அமைதியற்று. பரபரப்பாக விளங்கிய அந்த இடத்தை கிருஷ்ண ಟ್ವಿಟ್ಲಪಿ7 அழகாக கடுகிசி நகரம் என்று சொன்னதில் தவறில்லை தான். அது அங்ககளின் ரயில்வே ஸ்டேஷன் எனினும் அது தனி நக ரம் தான்! பொதுவாக, நாகரிக நகரங்களின் ரயில்வே கிலேயம் தனி உலகம் ஏழ்மை, பணக்காரத்துவம், ஜாதி பேதம், ஆண் பெண் உயர்வு தாழ்வு என்ற சுழிப்புகள் தலே காட்டாக இடம் என்ருலும் அதிகாரமிடுக்கு அவ்வப் போது கூத்தாடும். அமைதியும் ஆரவாரமும் மாறிமாறி அலேமோதும் மனிதர்கள் அடிக்கடி மிருகங்களாகிவிடுவ தும் அங்கேதான்! அதாவது ரயில் வரும்போதெல்லாம்: அப்பொழுது பிராயணிகள் தாங்கள் அகாகரிகப் பிராணி கள் என்று நிரூபித்துவிடுவார்கள் ! பகலேவிட இரவில் தான் இத்தனி நகரின் சிறப்புகள் பல புரியும் அதிகாலேயில் வரும் ரயிலுக்காக இரவு முழு வதும் கண் விழித்துக் காத்திருப்பவர்கள் கொஞ்சித் தழுவ வரும் துரக்கத்தை விசுவாமித்திர வைராக்கியத்துடன் விரட்டிக்கொண்டு கண்களே மூடித் திறந்தபடி உட்கார்க் திருப்பார்கள், சைணு பிரேதங்கள் போல. துரக்க மோகினி யிடம் ஏய்ப்புக்காட்ட முடியாத எண்ணற்ருேர் சும்மா முழிச்சுக்கிட்டே படுத்திருக்கலாமே!’ என்ற மன அரிப் புக்கு செவி சாய்த்து நீட்டி கிமிர்ந்து, உறக்கத்துடன் உறவு கொண்டாடவே ஆரம்பித்து விடுவர். இத்தகைய லட்சியமோ, பிகுவோ கொள்ளாத பலர் ஸ்டேஷனுக்கு வந்ததுமே நல்ல இடம் அகப்படாவிடில், கிடைத்த இடத் திலேயே-கூனிக் குறுகி ஒடுங்கி சமாதி கிலே ப யி ல த் தொடங்குவதும் சகஜம். இந்த ரகங்களர்ல் கண்ணுள்ள வர்களுக்கு சுவையான காட்சிகள் எதுவும் கிட்டாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/44&oldid=800305" இலிருந்து மீள்விக்கப்பட்டது