பக்கம்:குஞ்சாலாடு.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| —- குமாரி கனகாம்பரம் பின்னல் ஐடை மின்னல் இடை, என்ன நடை! என்ன ஒயில் என்ன ஸ்டைல்' என்று புளித்துப் போன முறையிலே குமாரி கனகாம்பரத்தை அறிமுகம் செய்ய வேண்டிய அவசியமே கிடையாது. சுருங்கச் சொல்லி விளங்க வைத்துவிடலாம் அவள் ஒரு நவ யுவதி என்ப தன் மூலம்! கண்ணுடி அழகு செய்யும் வதனமும், கண்ணுடிக், கன்னங்கள் இல்லாக்குறையை மறைக்க கண்ணுடி முன் நின்று பல மணி நேர உழைப்பை வீணுக்கி பவுடர் வெள்ளையடித்த மூஞ்சியும், கலகலக்கும் கண்ணுடி வளே யல்களுமாய் வழக்கம் போல் பள்ளிக்கூடம் கிளம்பிய கன காம்பரம் வழக்கம் போல் வீடு திரும்பவில்லை அன்று. ஆகையால் கன்னி கனகாம்பரத்தைப் பற்றிக் கொஞ்சம் அளக்க வேண்டியது அவசியமாகிறது. தன் மகள் படித்துப் பட்டம் பெற்று உத்தியோகம் பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன் அவள் தங்தை அவளைப் பள்ளிக்கூடம் அனுப்பவில்லை. என்னவோ காலு எழுத்துத் தெரிந்திருக்கட்டுமே என்ற தாராள நோக்கிலே பள்ளியில் புகுத்தப்பட்ட கனகாம்பரம் பிரைமரி'யை தாண்டியதும், வீட்டிலேயிருந்து தான் என்ன செய்யப் போரு! சும்மா படிக்கட்டுமே!’ என்ற தங்தையின் விசால நோக்குடன் பல படிகள் தாண்டி ஹைஸ்கூலே அடைக் தாள். தந்தையும் இந்த உலகத்தை விட்டு பாஸ் ஆகிவிட் டார்! அப்புறம் காகரிக மோகம் கொண்ட மங்கை படித் துத் தான் ஆகவேண்டும் என்ற உறுதியுடன் பள்ளிக் கூடம் போய்வரத் தொடங்கிளுள். - உண்மையில் அவள் படிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கத் தான் செய்தது நாள் தோறும் அவள் கைகோக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/49&oldid=800310" இலிருந்து மீள்விக்கப்பட்டது