பக்கம்:குஞ்சாலாடு.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குஞ்சாலாடு 55 தான் வஞ்சிக்கப்பட்ட கதையை அறிவித்தாள். தன்னை அந்த ஜெயிலிலிருந்து தப்புவித்து அந்தத் குடிகாரனிட மிருந்து மீட்டுவிட வேண்டும் என்று கெஞ்சிள்ை. பாத்தியா, பாத்தியா, பாத்தியா அந்தப் பயல் என்னைக் கூட ஏமாத்திப் போட்டான் பாத்தியா!' என்று தலையிலடித்துக் கொண்டான் மிஸ்டர் கா. விங்கம். பாரு, அவன் என்னிடம் அளந்தான். நீ அவைேட அத்தை மகள் என்றும், வீட்டிலே உள்ள வங்க உன்னை வேறு யாருக்கோ கல்யாணம் செய்து கொடுக்க முனைந்ததால், நீ அதை விரும்பாமல் இவனேத் தேடிவந்ததாகவும் சொன்னனே. ரேரே ஆண்டவா! இந்த உலகத்திலே என் னென்ன ஏமாற்றுகள் கடக்குடாப்பா!' என்று மறுபடி யும் தலையிலடித்தான் அவன். உலகை உய்விக்க வந்த உத்தமன் மாதிரி பாவித்துக் கொண்டு மிஸ்டர் கா: லிங்கம் பேசிஞன்: உலகம் ரொம் பக் கெட்டுப் போச்சு இப்போ யாரையுமே கம்பறத்துக் கில்லே. கான் ஜட்கா வாங்கிக் கொடுத்து பிழைக்கும் வழிதேடிக் கொடுத்த இந்தப்பயல் என்னிடமே உடான்ஸ் விட்டிருக்கானே பாத்தியா, பாத்தியா, பாத்தியா' மீண் டும் தலையில் அடிப்பு: ஏ. பொண்ணு இந்த எத்துவாளிப் பய கூட நீ இனிமேல் ஒரு கடினம் கூட இருக்கப் படாது. என்ன நான் சொல்றது? காணுச்சு உன்னக் காப்பாத்த. சரி புறப்படு உடனே. சமயத்தைப் பயன் படுத்திக் கொள்ளணும். உன்னே ஊரிலே கொண்டு சேர்க்கிறது என் பொறுப்பு. இன்னேக்கோ. நாளேக்கோ ரயிலேற முடியாது என்ன, இந்தப்பயலோட ஆட்கள் கழுகுக் கண், ஆந்தைக் கண் போட்டு பார்த்துக்கிட்டிருப்பாங்க. நம்ம டாபாய்ச் சிட்டோம்னு தெரிஞ்சுதுன்ன கூடக் கொஞ்சம் அலை வாங்க. ஆனல் பயபடாதே. நானச்சு இதுலே ரத்தம் சிந்தினுலும் சரி. இந்தப் பய, பாத்தியா பாத்தியா பாத் தியா என்னேயே ஏமாத்திப் போட்டான் ரெரேரே ஆண்டவனே. அல்லாவே. பரமசிவம் பாத்தியா பாத்தியா பாத்தியா! உலகம் ரொம்பக் கெட்டுப் போச்சு. ரொம்ப ரொம்பக் கெட்டுப்போச்சு...! இப்படி அந்த மகா யோக்கியர்: உலகம் அறியாக்குமாரி யுடன் பேசி கம்பிக்கை பூட்டி அவளே அழைத்துச் சென்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/61&oldid=800339" இலிருந்து மீள்விக்கப்பட்டது