பக்கம்:குஞ்சாலாடு.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குஞ்சாலாடு 57 கும் போதே பச்சை மிளகாய் கடிபட்டு சுரீரென்று தாக்கி கண்களில் ஐலம் தேங்கச் செய்வது போல, அவளுக்கும் கெருக்கடி ஏற்பட்டது. 'ஐயா...நீங்கள்...” என்று ஆரம்பித்தவள் உதடுகள் அதற்கு மேல் அசையவில்லே அசைய விடவில்லே அவன்! தன் உதடுகளால் அடக்கு முறை விதித்தான் கடினமாக! "பாத்திய பாத்தியா பாத்தியா மிஸ் கு. லாடு, என்னே மிஸ்டர் கா. லிங்கம் என்று கூப்பிடு. ஒ உயர் என்று கூப்பிடு. வேறு எப்படி வேண்டுமானுலும் கூப்பிடு. ஐயா என்று வேண்ட மடீ அம்மா என்று அவளே இழுத்துக் கொண்டான். எதிர்பாசா மாற்றங்களாலும் ஏமாற்றங் களாலும் செயலற்று நின்ற அவள் அந்த ருத்திராட்சப் பூனே கையில் சிக்கிய சிறு எ லியாளுள். காத்தலிங்கம் காத்தருள் புரிய வந்தது கூட கணபதி யப்பனின் சூழ்ச்சி தான் என்பது குமாரிக்குப் புரியாமல் போகவில்லே, மறுநாள் அங்கு ஆஜராளுன் ஜட்காவாலா. அழுது புழுங்கிக் கொண்டிருந்த அவள் அவனேக் கண்ட தும் திடுக்கிட்டாள். ‘என்ன மிஸ் கு. லாடுவைக் காண வந்தியா மிஸ்டர் அப்பர்?' என்று வரவேற்ருன் காத்தலிங்கம். அவன் புரி யாமல் விழித்தபடி என்னது, மிஸ் கு. லாடு வா? அது என்னதுடா அது!’ என்று கேட்கவும், நண்பன் தலையி லடித்துக்கொண்டான் : பாத்தியா, பாத்தியா, பாத்தியா! கம்ம இவ தான் குஞ்சாலாடு!" கணபதியப்பனுக்கு சந்தோஷம் பொறுக்க முடிய வில்லை. ஒஹ்ஹொஹோ குஞ்சாலாடு கொடுத்து அழைத்து வந்த கினேவுச்சின்னமோ? ஹொஹ்ஹொஹோ’ என்று கனைத்தான். விங்கமோ அவசரம் அவசரமாக "பாத்தியா! பல்லவி பாடி விட்டு இல்லை யில்லை யில்,ே ! அவ லட்டுன்ன லட்டு தான். குஞ்சாலாடு. அடடாடா! மிஸ் கு. லாடு வெளி பூட்டிபுல் ஒண்டர்ஃபுல்!” என்று கொக்கரித்தான். 'இப்படியாகத் தானே குமாரியை மூலதனமாக்கி அவர்கள் சூழ்ச்சிகரமாகத் திட்டமிட்டு தொடங்கிய சாத்தி -9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/63&oldid=800343" இலிருந்து மீள்விக்கப்பட்டது