பக்கம்:குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

could not, in any case, be construed as being subject to or subordinate to any other articles of the constitutions.'

Practice and proceedure of parliament by kaul and Shakdhar (page-233)

இந்தியப் பாராளுமன்ற சட்ட மன்றப் பேரவைத் தலைவர்கள் மாநாடும். உச்சநீதிமன்றத் தீர்ப்பின் விளைவாக, பாராளுமன்ற, சட்டமன்ற உரிமைகள் பறிக்கப்படுவதைத் தடுக்க, அரசியல் சட்டத்திற்குப் பொருத்தமான திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்று தான் கருத்து தெரிவித்ததே ஒழிய, அடிப்படை உரிமைக்கும், பாராளுமன்ற சட்டமன்ற உரிமைக்கும் மோதல் வரும் போது, அடிப்படை உரிமைக்கே முதல் இடம் என்றும், பாராளுமன்ற சட்டமன்ற உரிமைகள், அடிப்படை உரிமைக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்றும், அது நடவாத போது, அடிப்படை உரிமை பாதிக்கப் பெற்றவர். பாராளுமன்றம், சட்ட மன்றங்களை எதிர்த்து நீதிமன்றம் செல்லும் உரிமை படைத்தவராவார் என்றும் கூறிய உச்ச நீதி மன்றத் தீர்ப்பு தவறானது என்று தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உச்ச நீதிமன்ற இத்தீர்ப்பு குறித்துப் “பாராளுமன்றங்களும் நடைமுறைகளும்' என்ற தம்முடைய நூலில் தனியே விரிவாக விவாதித்த திரு.கவுல் அவர்களும், இதில் எழுப்பிய பிரச்சினை' அவ்வாறே இருக்கிறது. பொருந்தும் வகையில் தீர்க்கப்படவில்லை பாராளுமன்றத்தின் ஒரு செயல்பாட்டு மூலம், தெளிவாகச் சொல்வதானால், சம்பந்தப்பட்ட சட்டங்களைப் பொருந்தும் வகையில் திருத்தி, பாராளுமன்ற சட்ட மன்றங்களை அவமதிப்போரை ஜாமீனில் விடும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு இல்லை என்பதை ஐயத்திற்கு இடம் இல்லாத வகையில் செய்வது ஒன்றே,