பக்கம்:குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. என்றாலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க அனுமதித்தது. ஜெயின், உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கை ஏற்றுக் கொண்ட உச்சநீதி மன்றமும் பாராளுமன்ற சபாநாயகர் உள்ளிட்ட மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பியது. பாராளுமன்ற சபாநாயகர் நோட்டீஸை மறுத்து விட்டார், இதற்கிடையில் உச்சநீதிமன்றமும் வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது.

பாராளுமன்றம் ஜெயின் செயல் உரிமை மீறிய தாகும் எனக்கருதி, உரிமைக் குழுவுக்கு அனுப்ப, உரிமைக் குழு, இதுதான் முதன் முறை என்பதாலும், நீதிமன்றங்கள் வழக்கை ஏற்றுக் கொண்டிருந்தாலும், இறுதியில் பாராளுமன்ற நிகழ்ச்சியில் தலையிட உரிமை இல்லை என தெரிவித்து விட்டமையாலும், இத்துடன் விட்டு விடலாம், மேற்கொண்டு எவ்வித நடவடிக்கையும் தேவை இல்லை எனக்கூறி முடித்து விட்டது.

இது பேரவைத் தலைவர்கள் மாநாட்டு மலரில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

presiding officers conference souvenir, page.. 10, IF' -

பாராளுமன்றம், தன்னை , உயர்நீதிமன்றத்திற்கு கொண்டு சென்ற தேஜ்கிரான் ஜெயின் மீது தான் உரிமைப் பிரச்சனை எழுப்பி உரிமைக்குழுவிற்கு அனுப்பி வைத்ததே அல்லாது, சபாநாயகரையும் உறுப்பினர்களையும், வழக்கு மன்றத்திற்கு வரப்பணித்து நோட்டீஸ் அனுப்பிய டெல்லி உயர்நீதிமன்றத்தின் மீதோ, உச்சநீதிமன்றத்தின் மீதோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.