பக்கம்:குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

பாராளுமன்றமோ, சட்டமன்றமோ, தமக்கு வரையறுத்துக் கொடுத்துள்ள உரிமைகளை மீறிச் செயல்படும்போது, அவற்றின் அச்செயல் குறித்து நீதிமன்றங்களுக்குச் செல்லலாம் என்பது இதனால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதே போல் 1971ல் கோலக்நாத் என்பவர், பஞ்சாப் மாநில அரசு மீது தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் 11 நடுவர்களைக் கொண்ட ஒரு பெஞ்சாக அமர்ந்து ஆராய்ந்து ஆறு நடுவர்கள், “அரசியல் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை (Fundamental rights) அறவே நீக்கவோ உரிமைகளைக் குறைக்கவோ (Take away or abridge) மக்கள் அவைக்கு அதிகாரம் இல்லை என்ற தெளிவான தீர்ப்பினை வழங்கி விட்டது.

"In February, 1971, The Supreme Court held by a majority of one in a special bench of 11 judges, that the parliament had no power by the procedures of amendment to take away or abridge the fundamental rights."

Page: 11 Presiding officers conference Souvenir

உச்ச நீதி மன்றம், இத் தீர்ப்பு வழங்கியதற்குக் காட்டிய பல்வேறு காரணங்களில் தலையாயவை இரண்டு, ஒன்று அரசியல் சட்டம் 3-ஆம் பகுதியில் தனக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளை நிலை நாட்டிக்கொள்ள உச்ச நீதிமன்றம் செல்லும் உரிமையை வழங்கும் அரசியல் சட்டம் 32-வது பிரிவு தெளிவாக உள்ளது என்பது.