பக்கம்:குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

"Article 32 of the constitution was explicit. The state could not make laws to take away or abridge the rights conferred by part III of the constitution.'

Ditto! Page 12

இரண்டாவது காரணம், அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டுமாயின், பாராளுமன்றம், ஒரு கூட்டம் மூலம், மற்றொரு அரசியல் நிர்ணய உரிமையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது.

"If the constitution were to be amended, parliament should by legislation call for another constituent Assembly,"

Ditto: Page: 12

உச்ச நீதிமன்ற இம்முடிவுக்கு மாறான கருத்தைத் தெரிவித்த பாராளுமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள்"மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களாக 768 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில், மக்களவை உறுப்பினர்களாகிய 525 பேர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்கள். ஆகவே அவர்கள் மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களாகிய 296 பேரைக் காட்டிலும் பெரிதும் பிரதிநிதித்துவம் வாய்ந்தவர்கள் ஆவர்" என்று மட்டுமே கூற முடிந்தது.

"The present parliament with 768 members of which 52S in the Lok sabha were directly elected by the people was far more representative of the people of India than the constituent Assembly with its 296 members who were indirectly elected."

Ditto: Page: 12