பக்கம்:குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

41

வரை அது கொண்டிருந்த பொருள்) முறையான சில செயல்பாடுகள், வழக்கமாகப் பாராளுமன்றம் தன்னுடைய ஒருங்கிணைந்த கூட்டுத் தன்மையில் எடுக்கும் முடிவு என்பதே ஆம். இப்பொருள் இயற்கை யாகவே பாராளுமன்றம் எடுக்கும் செயல்பாடுகளுக்கு ஆதாரமான அவை அலுவல்களின் முறைகளையும், பாராளுமன்றத்து மொத்த நடைமுறையினையும், அவற்றுள்ளும் தலையாயதான், இறுதியில் எடுக்கும் முடிவினுக்கு வழிவகுக்கும் அவையின் வாதத்தையும் குறிக்கும் வகையில் விரிவாக்கப்பட்டது.”

“The primary meaning, as a technical parliamentary. term of “procedings” (which it had at least as early as the 17th Century) is, some formal action usually, a decision taken by the House in its collective capacity. This is naturally extended to the forms of business, in which the House takes action, and the whole process, the principal part of which is debate, by which it reaches a decision.”

Eriskine May's Page: 87

பாராளுமன்ற நடைமுறைகளில் திளைத்து எழுந்து, முதிர்ந்த அறிவு பெற்றவர்களாகிய திருவாளர்கள் கவுல், ஷக்தர் ஆகிய இவர்களாலும், பாராளுமன்ற நடைமுறை (Proceeding in Parliament) orgårp Q&mi-G536; தெளிவான பொருளைக் கூற முடியவில்லை.

'பாராளுமன்ற பழக்கங்களும் நடைமுறைகளும்' என்ற தம் நூலில் ஒரு பத்தியின் தொடக்கத்தில் "பாராளுமன்றத்தின் நடைமுறைகள்' (Proceedings in Parliament) என்ற தொடருக்கோ, 'பாராளுமன்றத்தில் சொல்லப்பட்ட எந்தப் பொருளும்' (Anything Said