பக்கம்:குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

 45

வேறு குழுக்கள் கூடியிருக்கும் போது நிகழும் நிகழ்ச்சி களையும் மட்டுமே குறிக்கும் என்பது ஐயத்திற்கு இடம் இன்றி உறுதியாகிறது.


அவை அலுவல்களாகக் கொள்ளப்படுவன யாவை? 
 (1) தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளுதல் (4) (1) பதிவேட்டின் கையெழுத்து இடம் (5)
 (2) பேரவைத்தலைவர் (7) துணைத்தலைவர் (8. தேர்தல்கள் மாற்றுத் தலைவர் பட்டியல் தருதல் (9)
 (3) ஆளுநர் உரையும் அதன்மீது விவாதமும் (11,12)
 (4) தனியார் அலுவல்கள் ெ
  1. வினாவிடை (32) 2) கவன ஈர்ப்புத் தீர்மானம் (55) 3) ஒத்திவைப்புத் தீர்மானம்,(56), 4) அரைமணிநேர விவாதம் (54), 5) குறுகியகால விவாதம் (76) 6) பொது நலன் குறித்த நாள் குறிப்பிடாத தீர்மானம் (78) 7). பேரவைத் தலைவர், துணைத் தலைவர் பதவி விலக்கல் தீர்மானம் (68) 8)அமைச்சரவை மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் (72) 8) தனித் தீர்மானம் (198) 10) வெட்டுத். தீர்மானம் (211) 11) தன்னிலை விளக்கம்.
 (5) அரசு அலுவல்கள்:
 1) நிதிநிலை அறிக்கை அளித்தலும் (207) அதன்

மீது பொது விவாதமும் (209)

 2) மானியக் கோரிக்கையும் விவாதமும் (211)   
 3)கூடுதல் நிதிக்கான மானியம் கோரல் (213). 4) 
 4)துணை மானியக் கோரிக்கை (215)