பக்கம்:குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

அவசரக் கூட்டமும் சட்ட மன்றத் தீர்மானமும்

இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு கட்டமாக, இந்தியை, இந்தியாவின் ஆட்சி மொழியாக்கும் அரசியல் சட்டத்தின் பிரிவைக் கொளுத்தியது அரசியல் சட்டத்தை அவமதித்ததாகும். அரசியல் சட்டத்தை மதிப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனவர்களின் இச்செயல் சட்டமன்ற மரபை மீறியதாகும் என்று கூறி 24-11-86-ஆம்தேதியன்று பேராசிரியர் உள்ளிட்ட 7 சட்ட மன்ற உறுப்பினர்களின் பதவிகளைப் பறித்து தீர்ப்பளித்து விட்டார் சபாநாயகர்.

சபாநாயகரின் செயல் சட்ட மரபுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது என சட்ட வல்லுநர்கள் அனைவரும் ஒருமித்த கருத்து வெளியிட்டு அவர் செயலைக் கண்டித்தனர். சட்டத்தை எரித்தவர்கள் சட்டமன்ற உறுப்பினர் தகுதியை இழந்து விட்டனர் என சபாநாயகர் தீர்ப்பு அளித்துவிட்ட பின்னரும் திரு. மதுராந்தகம் ஆறுமுகம், .திரு. ஆபிரகாம், திரு. அரக்கோணம் வி. கே. ராஜு ஆகிய 3

சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு இந்திதான்் இந்தியாவின் ஆட்சிமொழி என்ற சொற்றொடர் அச்சிட்ட காகிதத்தைக்கொளுத்தி, பேராசிரியர் உள்ளிட்ட அந்த 7 பேரைப் போலவே கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டனர்.