பக்கம்:குடும்பப் பழமொழிகள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

உறவினரைக் கடவுளே கொடுத்து விடுகிறார், நண்பர்களை மட்டும் நாமே தேர்ந்து கொள்ளலாம். -இங்கிலாந்து

உறவினர் குறைந்திருத்தல் ஓர் அதிருஷ்டம்தான். - கிரீஸ்

தன் குடும்பத்தை விட்டு ஓடுபவன் நெடுந்தூரம் சென்று கொண்டே யிருக்கவேண்டும். -லத்தீன்

சகோதரர்

சகோதரனைப் போன்ற நண்பனில்லை, சகோதரனைப் போன்ற பகைவனுமில்லை. - இந்தியா

கைகளும் கால்களும் போன்றவர்கள் சகோதரர்கள். -சீனா

உடன் பிறந்தார்கள் ஒத்து வேலை செய்தால், மலைகளெல்லாம் பொன்னாகும். -( , , )

சகோதரர்களாயிருங்கள், ஆனால் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். -அரேபியா

சொந்த சகோதரர்கள் கவனமாகக் கணக்கு வைத்திருப்பார்கள். -சீனா

இளைய சகோதரனுக்குப் புத்தி அதிகம். -இங்கிலாந்து

சகோதரன் என்பவன் இயற்கையாக நமக்கு அளித்துள்ள நண்பன்.

அவர்கள் சகோதரர்களானாலும், அவர்களுடைய பைகள் சகோதரிகளில்லை. - துருக்கி

தாயும் பிள்ளையும் ஒன்றானாலும், வாயும் வயிறும் வேறு.

-தமிழ்நாடு

மூன்று சகோதரர்கள் மூன்று கோட்டைகள். - போர்ச்சுகல்

மாமியார்

மாமியாருக்கு மரியாதை காட்டினால், தினமும் மூன்று முறை உன் வீட்டுக்கு வருவாள். -ஜப்பான்