பக்கம்:குடும்பப் பழமொழிகள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83

இறந்தோரைப் பற்றிப் பெருமையாக மட்டும் பேசு. -லத்தீன்

மரணத்திற்கு மருந்தில்லை. -( , , )

மரணம் வயது முதிர்ந்ததைக் கொண்டு போவதில்லை, பழுத்ததையே கொண்டு போகின்றது. -ரஷ்யா

மரணம் குட்டிகளையும், ஆடுகளையும் சேர்த்து விழுங்குகின்றது. - ஸ்பெயின்

மரணம் உண்மையைப் புலப்படுத்துகின்றது. - யூதர்

கல்லறை

புதைப்பதற்கு எந்த நிலமும் நல்லதுதான். -ஜப்பான்

வாழ்க்கையில் முதன்மையான விஷயம் நல்ல முறையில் அடக்கம் செய்யப்படுதல். -சீனா

இடுகாடுதான் குடிக்கூலி குறைவான விடுதி. - நீகிரோ

பூமிதான் தக்க புகலிடம். - இங்கிலாந்து

கல்லறையுள் அரசன் யார்? ஆண்டி யார்? -( , , )

தங்க முலாம் பூசிய கல்லறைகளினுள்ளும் புழுக்களே உள்ளன. -ஷேக்ஸ்பியர்

நம்முடைய வாழ்வு சமாதியை நோக்கிச் செல்லும் யாத்திரையாகத்தான் இருக்கிறது. - இங்கிலாந்து

பொதுவாக எல்லோரும் சந்திக்குமிடம் சமாதி தான். -( , , )

வயது கூடக்கூட, நாம் கல்லறையை நெருங்கிக் கொண்டே யிருக்கிறோம். -( , , )

கல்லறையிலேதான் ஓய்வுண்டு. -யூதர்

நாம் வாங்குகிற ஒவ்வொரு மூச்சும் நம் சமாதியை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியாகும். - அரேபியா

நன்மையும் தின்மையும்

ஒவ்வொரு நன்மையிலும் ஒரு தின்மையும் உண்டு. - லத்தீன் நல்லது நத்தை வேகத்தில் பரவும், தீயது சிறகடித்துப் பறக்கும். - இந்தியா