பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட்‌ பேறு,


என்றன்‌ அமிழ்தே" என்று கூவியபடி!

மைப்புரு வத்து மங்கை நகைமுத்துக்‌

கைப்புறத்‌ இல்தன்‌ கட்டழகு சுமந்து

வந்துதாழ்‌ வாரத்இில்‌ மணவா எனிடம்‌.

காட்டி நின்றாள்‌! கண்டவே டப்பன்‌: அடங்கொணா மகழ்ச்சியால்‌ அருமை மகளை எடுக்க விரைந்தான்‌. "அதுதான்‌ இயலாது! கொள்அன்று; கொத்த மல்லி அன்று;

பிள்ளை அத்தான்‌* என்றாள்‌ பெற்றவள்‌.

  • பிள்ளையைத்‌ தூக்கும்‌ பெருந்திறம்‌ தானும்‌

கொள்ளவே சொல்லிக்‌ கொடு"வெனக்‌ கேட்டான்‌. வேடப்ப னுக்கு விளக்குவான்‌ துணைவி:

    • ஆழியில்‌ உருவமான அழகுமட்‌ கலத்தை

இயற்றி யோர்க்கே எடுப்பது முடியும்‌;

சுட்டமட்‌ கலத்தை எவரும்‌ தூக்கலாம்‌!

இறுகா அமிழ்‌இன்‌ இளகல்‌ உடம்பை

உறுத்தாமல்‌ தூக்க ஒருதிறம்‌ வேண்டும்‌.

இன்னும்‌ சொல்வேன்‌ நன்று கேட்க:

குளநீர்த்‌ தாமரை குழந்தையின்‌ இளந்தலை! அம்மலர்த்‌ தண்டே அழிய 'மெல்லுடல்‌” 'தண்டுடல்‌ மலர்த்தலை தாங்குமோ அத்தான்‌? 'ததலைஉடல்‌ இரண்டைபயும்‌ ஒருங்கு தாங்க. உலைஅமிழ்தை வறியவள்‌ ஒருத்இதூக்‌ கல்போல்‌ தவறாது தூக்குவது தலையா இயகடண்‌. தெரிந்ததா அத்தான்‌” என்றாள்‌ தெரிவை; ஈகற்றேன்‌ கணக்கா யரேகற்‌ றபடி.

நிற்கும்‌ படியும்‌ நிகழ்த்துக* என்றான்‌...

தூக்குக்‌ காட்டினாள்‌ தோகை

தூக்இனான்‌. “சரி* எனச்‌ சொன்னாள்‌ துணைவியே.

தந்தையின்‌ தவறு அறு? விருத்தம்‌ வேடப்பன்‌ உணவ ருந்த. மகளோடு விளையா டற்குக்‌ கூடத்தில்‌ வந்து பார்த்தான்‌ தூங்‌இடும்‌ குழந்தை கண்டான்‌.


  • ஆழி - குயவர்‌ சக்கரம்‌: