பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருந்தோம்பல்
ஞாலத் தொடர்பினால்
நல்லின்பம் காண்லன்றி
ஞாலத்துநவில் இன்பம்
தண்ணுவதும் -ஏலுமோ?
"உற்றாரை யான்வேண்டேன்
ஊர்வேண்டேன் போவேண்டேன்
கற்றாரை யான்வேண்டேன்"
கண்இனிக்கப்-பெற்றெடுத்த
தாய்தந்தை வேண்டேன்
தமிழ்வேண்டேன் தாய்நாட்டின்
ஓய்வு தவிர்க்கும்
உரன்வேண்டேன் தேய்வுற்றே
கண்முக்கு வாய்உடம்பு
காதென்னும் ஐந்து
ஒண்வாயில் சாதி
உளம்மாய்ந்து-வண்ணவுடல்
பேறிழத்தல் பேரின்பம்
அஃநோன்றே வேண்டு"மென்று
கூறிடுவார் கூறுவதே
அல்லாமல்-வேறு பயன்
கண்டாரோ அன்னவர்தாம்
"காட்டுவிரோ' என்றுரைத்தால்.
"கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர்"
என்று மொழித்தே
இலைச்சோற்றில் பூசனிக்காய்
நனிமுயல்வர்-இன்றுபல
நன்று மறைக்க
ஆச்சிரமம்
ஆசிரமம் பேராஸ்
அறவிடுதி கண்டுநல்ல
பேச்சியம்பிச் சொத்தைப்
பெருக்கியே-போய்ச்செல்வர்
கூட்டம் பெருக்கிக்
குடித்தனத்தை மேல்வளர்த்தார்
39