பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குண்டான உடம்பைக் குறைப்பது எப்படி?

19


உடலமைப்பு உள்ளவர்கள் 125 பவுண்டுக்குள்ளாக இருக்கவேண்டும் என்பதும், ஒரு குறிப்பிட்ட உயரம் உள்ளவர்கள் ஒரு குறிப்பிட்ட இரண்டு எடைக்குள்ளாக இருந்தால் சரியாகவும் சீராகவும் இருக்கும் என்பதுதான் கணக்கு.

2. பெண்களுக்கான எடையும் உயர அளவும்

உங்கள் உயரத்தை அறிந்து கொள்ள வேண்டுமென்றால், உயரம் அளக்கும் கம்பத்தில் நின்றால், போதும்.

உங்கள் உடல் எடையை அறிந்து கொள்ளவேண்டும் என்றால், எடைபார்க்கும் இயந்திரம் துல்லியமாக உதவும்.

நீங்கள் குண்டாக இருக்கின்றீர்களா என்ற கேள்விக்கு விடை எங்கே கிடைக்கும் யாரிடம் போனால் கிடைக்கும்?

இதை அறிந்து கொண்டால்தானே, அடுத்த படிக்குப் போகமுடியும் உயரமும் எடை அளவும் போதாது. உங்களை நீங்களே அளந்து கொள்ள வேண்டும். அறிந்து கொள்ள வேண்டும்.

சாதாரணமாகச் சொன்னால், கொஞ்சம் தடித்து உடம்பு என்பார்கள். அனுதாபத்துடன் சொன்னால், கொஞ்சம் கொழுப்பு அதிகமான கொழுத்த உடம்பு என்பார்கள். குறும்பாகச் சொல்பவர்கள் தான் குண்டு உடம்பு என்பார்கள்.

குண்டு உடம்பு என்று எதனால் கூறுகின்றார்கள் என்றால், பார்ப்பவர்களின் கண்களுக்கு, பட்டவர்த்தன