பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குண்டான உடம்பைக் குறைப்பது எப்படி?

47


ஏற்பட்டிருக்கிற உடல் எடையைப் பார்த்து எவ்வளவு அதிகரித்துள்ளது என்று பேசும் போது, அவற்றை நாம் சரி செய்ய முயல்வது சாத்தியம் ஆகும்.

2. குண்டாகி விடும் குழந்தைகள்

உடலில் ஏன் எடை கூடி, உருவம் மாறிப்போகிறது என்பதை அறிவதில், வல்லுநர்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நாகரீக காலத்தில், இது ஒரு பிரச்சினை போலவே இடம் பிடித்து இருப்பதால், அறிவியலார், அதிகமாக அக்கறை கொண்டு, ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆகவே, ஆண், பெண் என்ற பேதங்களை ஆய்வு செய்கிறபோது, வயது வேறுபாடுகளையும் வகுத்துப் பார்க்கின்றனர். அதை குழந்தைகள், இளைஞர்கள், வயதானவர்கள் என்று பிரித்துப் பார்க்கின்றபோது, சில உண்மைகளையும் அறிய முடிகின்றது என்கிறார்கள்.

குழந்தைகள் ஏன் குண்டாக இருக்கின்றார்கள்? அவர்கள் உடலிலே அதிகமான கொழுப்பு செல்கள் இருக்கின்றன. அந்த அதிகசெல் அளவான, வயதானவர்களுக்கும் வாலிபர்களுக்கும் இருப்பதை விட அதிகம் என்று கணக்கெடுத்திருக்கின்றனர்.

இப்படி குழந்தைகளுக்கு இருக்கும் அதிக அளவு கொழுப்பு செல்களைக் குறைப்பது கடினம் என்றும்; அதுவும் வயதானவர்களுக்கு இருக்கும் செல்களைக் குறைப்பதைக் காட்டிலும், கஷ்டம் என்றும் கண்டறிந்து கூறுகின்றார்கள். அவ்வாறு, குழந்தைகளின் கொழுப்பு செல்களை வேகமாகக் குறைக்க முயல்வதும் விவேகம்