பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


1. மென்மையாகத்தாக்கும் ஒவ்வாமை

மென்மையாகத் தாக்கும் ஒவ்வாமையென்பது தோல் பகுதியைத் தாக்கும். சில ஒவ்வாமை சுவாசப் பகுதியைத் தாக்கும். சில ஒவ்வாமைகள் பிறப்பிலிருந்தே தொடரும். நீங்கள் குழந்தையாக இருந்த பொழுது இந்த ஒவ்வாமை வியாதியால் பாதிக்கப்பட்டு இருப்பீர்கள். அது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் உங்கள் பெற்றோருக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கும். குழந்தையாக இருக்கும் போது போதிய சத்துக்கள் இல்லாமல் ஒவ்வாமை ஏற்படுவது உண்டு.

அநேகம் பேர்கள் உண்ணும் உணவால்தான் ஒவ்வாமை ஏற்படுகிறது என்பதை அவர்கள் அறியாமலே வாழ்கிறார்கள். ஒரு சில உணவுவகைகளை அவர்கள் வெறுத்து ஒதுக்கும்போது, அதன் காரணமாக ஒவ்வாமைநோய் ஏற்படுவதில்லையென்று அவர்கள் அறியாமலேதான் வாழ்கிறார்கள்.

2. கடுமையான ஒவ்வாமை

கடுமையான ஒவ்வாமை என்பது தோல் பகுதியில் ஏற்படுகின்ற 'எக்ஸிமா' என்கின்ற படைநோய். இதமாகக் காற்றை இழுத்துவிடும் சுவாசத்தில் தசையை உண்டாக்கித் தடுமாற்றத்தை ஏற்படுத்தும் ஆஸ்மா எனப்படுகிற, சுவாச இழுப்புநோய். கடுமையான ஒவ்வாமை ஏற்படுத்துகிற மூன்றாவது பாதிப்பு 'ஒற்றைத் தலைவலி.'

ஒற்றைத் தலைவலி வந்துவிட்டால் பாதிக்கப்பட்டவர் பார்வைக்கே பங்கம் வந்து, பலப்பல