பக்கம்:குதிரைச் சவாரி.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறிது தூரம் சென்றதும், “ஏன் தம்பி, உன் வீடு எங்கே இருக்குது?” என்று கேட்டான் முனுசாமி.

“என் வீடு ராமானுஜம் தெருவிலே இருக்குது.”

“அடடே, ராமானுஜம் தெருவா! நான்கூட அதற்கு முன்னால் ஒரு தெரு இருக்கிறதே-பெரியகுளத் தெரு-அதிலேதான் இருக்கிறேன். என் வீட்டுக்கு முன்னால் வந்துகூட நீ இறங்கிப் போகலாமே!” என்று சொன்னான் முனுசாமி.

மோஹனுக்கு ஆனந்தம் இவ்வளவு அவ்வளவு அல்ல. பெரிய ராஜகுமாரன் போல நினைத்துக்கொண்டே சவாரி செய்தான்.

முனுசாமி வீடும் வந்துவிட்டது. “இதுதான் தம்பி என் வீடு. இப்போது நீ இறங்கிப் போகலாம்,” என்று கூறி முனுசாமி மோஹனைக் கீழே இறக்கிவிட்டான்.

கீழே இறங்கியதும், “அண்ணா, உன்னை நான் மறக்கவே மாட்டேன். போய் வரட்டுமா?” என்றான் மோஹன்,

“சரி, தம்பி, நாளே மறக்காமல் வந்துவிடு” என்றான் முனுசாமி.

மறுநாள் முதல் மோஹன் முனுசாமி விட்டுக்கே போய்விடுவான். சரியாக மூன்றரை மணிக்கே முனுசாமி யின் வீட்டில் அவன் இருப்பான். இருவரும் அங்கிருந்து நான்கு மணிக்குப் புறப்படுவார்கள். போகும்போதுதான் வழியிலுள்ள வெற்றிலைபாக்குக் கடைகளில் முனுசாமி வெற்றிலை பாக்கு வாங்குவான், டீ சாப்பிடுவான்.

ஆனால், அப்போதெல்லாம் மோஹன்தான் குதிரைகளை ஒட்டிச் செல்வான். இரண்டு குதிரைகளின் கடிவாளங்களையும் பிடித்துக்கொண்டு, அவற்றை ஒட்டிச் செல்வதிலே அவனுக்கு ஒர் அலாதிப் பெருமை!

இப்படியே பத்து நாள்கள் சென்றன.

மோஹன், தான் தினமும் குதிரைகளை ஒட்டிச் செல்வதையும், குதிரைச்சவாரி செய்வதையும் அப்பா. அம்மா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குதிரைச்_சவாரி.pdf/13&oldid=496023" இலிருந்து மீள்விக்கப்பட்டது